தடை பட்டுக் கொண்டிருந்த
தங்கையின் திருமணம்வீடு முழுக்க படர விட்டிருந்தது
சோகத்தின் நெடியை.
கலகலப்பும், கிண்டல் பேச்சுக்களும்
காணமல் போய்
நெடுநாட்களாகி விட்டிருந்தன.
தற்காலிகமாய்
பரிகாரங்களிலும்,
பிரார்த்தனைகளிலும்
ஆறுதல் தேடிக் கொண்டிருந்தார்கள்
அம்மாவும், அப்பாவும்.
எதிலும் ஓட்ட இயலாமல்
தவித்த மனதிற்கு
தனிமை மட்டுமே
தந்தது ஆறுதலை.
உறங்க நினைத்தாலும்
இமைகள்
இறங்க மறுத்தன.
மனக் குகைக்குள்
திக்குத் தெரியாமல்
திமிறி ஓடிக் கொண்டிருந்த
குழப்பமென்னும் குதிரையை
கட்டுப்படுத்தும் முயற்சியில்
களைப்பே மிஞ்சியது.
தூக்கம் வராமல்
தொலைந்து போனதில்
அகண்டு பரந்திருந்த
ஆகாயத்தைப் பார்த்தபடியே
படுத்துக் கிடந்தேன்.
தேகம் தேய்ந்துகொண்டிருந்தாலும் ஒளி வீசும் தன் கடமையை
ஒத்திப் போடவில்லை நிலா.
எப்போது வேண்டுமானாலும்
எரிகற்களாகி விழப்போகும்
கனல்த் துண்டு நட்சத்திரங்களோ
கண்சிமிட்டிச் சிரித்தன.
எங்கோ தூரத்தில்
மின்னல் கீற்றுக்கள்
சாட்டைகளாய் சுழன்று பின்
சட்டென்று மறைந்து போயின.
எல்லா நிகழ்வுகளையும்
உள் வாங்கிக் கொண்டு எல்லா நிகழ்வுகளையும்
அமைதி காத்தது வானம்.
எதுவோ புரிந்தது போலவும்,
ஒன்றுமே புரியாதது போலவும்
எண்ண அலைகள்
எழும்பி, எழும்பி
மனம் முழுக்கப்
விடியலில் கண் விழிக்கையில் பரவிப் படர்ந்தன .
நடக்கும் நிகழ்வுகளுக்கு
நாமா பொறுப்பு?
நடப்பதை மட்டும்
பார்த்துக் கொண்டிருக்கும்
பாத்திரம் மட்டுமே
தரப்பட்டிருக்கிறது
உனக்கு எனச் சொல்லி
கெக்கரித்தது ஒரு குரல்.
இல்லையில்லை
நடப்பவற்றை
நமக்குச் சாதகமாய்
மாற்றி கொள்வதற்க்கான
மந்திர சாவி என்னவோ
எல்லோரின் கைகளிலும்தான்
கொடுக்கப் பட்டிருக்கிறது என
சற்றே கோபமாய்
தர்க்கம் செய்தது இன்னொன்று.
நீண்ட நேர மனப் போராட்டத்தில்
எதைத் தெரிவு செய்வது எனத்
தீர்மானிக்கும் முன்பே
எதைத் தெரிவு செய்வது எனத்
தீர்மானிக்கும் முன்பே
தூங்கி விட்டிருந்தேன்.
புதிதாய் உணர்ந்தேன்
எல்லாமே புதிதாய்.