20.3.12

குழந்தையும், மழைச்சாரலும்

கிண்ணத்தில் இருக்கும் பொரிகளை
பிஞ்சுக் கை நிறைய அள்ளி
சாப்பிட விழைகிறது குழந்தை.
ஒவ்வொரு முயற்சியிலும் ஒன்றிரண்டு தவிர
எஞ்சிய பொரிகள் எல்லாம்
மொட்டு விரல்கள் இடையே
மழைத் துளிகளாய் வழிந்தோடி
தரை விரிப்பான் எங்கும்
சிந்திச் சிதறுகின்றன.
குழந்தை உண்ணும் அழகை ரசித்தவாறே
சிந்திய பொறிகளை  மீண்டும் சேகரித்துக்
கிண்ணம் நிரப்பி மகிழ்கிறாள் அம்மா.
மழைச் சாரலைப் போலவே
எல்லா சமயங்களிலும் எல்லோராலும்
ரசிக்கப்படத் தக்கதாய் இருக்கிறது
குழந்தையும், அது சாப்பிடுகிற அழகும்.