8.2.11

கொசு

காதருகில் ரீங்காரமிட்டுக்  
கடந்து சென்றது கொசு!
எழுந்தோடிச் சென்று
கதவு, சன்னல்களை மூடி
புகைச்சுருளைப் பொருத்தி வைத்து
முழு வேகத்தில்
மின் விசிறி சுழல விட்டு
மூச்சிறைக்க அமர்ந்து கொண்டேன்
நாற்காலியில்!
மறுபடியும் காதருகில்
அதே ரீங்காரம்...
கைகளை ஆயுதமாக்கிக்
காத்திருந்தேன்
அடுத்த முறை அதை
அடித்து ஒழித்துவிடும் எண்ணத்தோடு!
பின் கழுத்தில், கைகளில்,
கணுக்காலில் என
இடங்களை மாற்றி, மாற்றி
வெற்றிகரமாய் கடித்தது கொசு!
பலமுறை அடிக்க முற்பட்டும்
தப்பித்துக் கொண்டேயிருந்தது
அகப்படாமல்!
நீண்ட நேரப் போராட்டத்தில்
எனது கைகளுக்குள்
சிக்கிக் கொண்டது ஒரு வழியாக!
எதையோ சாதித்துவிட்ட திருப்தி
எனக்குள்!
உள்ளங்கை விரித்துப் பார்த்தேன்...
ஒட்டிய நிலையில்
உயிரை விட்டிருந்தது
பொல்லாத கொசு!
அதைக் கொன்று விடும் தீவிரத்தில்
பைத்தியக்காரனைப் போல
பலமுறை என்னை நானே
அடித்துக் கொண்டதை சுட்டிக்காட்டி
நகைப்பது போலிருந்தது
நசுங்கிக் கிடந்த கொசுவைப் பார்க்கையில்!







3 கருத்துகள்:

Yaathoramani.blogspot.com சொன்னது…

,
பைத்தக்காரனைப்போல என்னை நானே
அடித்துக் கொண்டது.."
அனவரும் அடித்துக்கொள்வதுதான்
ஆனல் அதை கொசுவின் பார்வையில் பார்ப்பது
என்பது வித்தியாசமான சிந்தனை
நல்ல பதிவுதொடர வாழ்த்துக்கள்

Thoduvanam சொன்னது…

இறந்த கொசுவுக்கும்,அடிபட்ட உங்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.நல்லா எழுதி இருக்கிங்க.
வாழ்த்துக்கள்

ஆயிஷா சொன்னது…

கொசுவுக்கு கவிதை நல்லா எழுதி இருக்கிங்க.
வாழ்த்துக்கள்.