30.10.11

பரிணாம வளர்ச்சி 
நண்பனின் வீட்டில் விருந்து.  
சம்பிரதாயமாய்  
சிற்றுண்டிகள் வாங்கிச் சென்று  
குழந்தையின் கையில் கொடுத்தேன். 
பெற்றுக் கொண்டதும் 
சம்பிரதாயமாய்
ஒரு புன்னகையைத்
தந்துவிட்டுப் போனது
குழந்தையும்.

7 கருத்துகள்:

சுசி சொன்னது…

வாழ்க்கையோட நிர்ப்பந்தம் :)

ShankarG சொன்னது…

சுசி,

தங்கள் வரவிற்கும், கருத்துப் பதிவிற்கும் நன்றி.

Yaathoramani.blogspot.com சொன்னது…

அருமையான சிந்தனை
அருமையான படைப்பு
ஈற்றடியில் சொல்லப்பட்ட " யும் " மிகச் சிறப்பு
தொடர வாழ்த்துக்கள்

ShankarG சொன்னது…

ரமணி,

தங்கள் வரவிற்கும், உற்சாகமூட்டும் கருத்துப் பதிவிற்கும் நன்றி.

ShankarG சொன்னது…

ரமணி,

தங்கள் வரவிற்கும், உற்சாகமூட்டும் கருத்துப் பதிவிற்கும் நன்றி.

Thooral சொன்னது…

யாவை யாவும் நிதர்சன உண்மை

ShankarG சொன்னது…

ஜெயராம் தினகரபாண்டியன்,

தங்கள் வரவுக்கும், கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி.