ஒரு கோடைக்கால ஞாயிற்றுக்கிழமையில்
வாசலில் வந்த ஐஸ் வண்டிக்காரனிடம் குச்சி ஐஸ் வாங்கி சுவைக்கத் துவங்கியதும்
கம்பிகளினூடே
ஏக்கம் நிறைந்த கண்களுடன்
என்னையே பார்த்துக் கொண்டிருந்தான்
எதிர் வீட்டுச் சிறுவன்!
சிறுவனுக்கு வாங்கித் தருவதிலும்
சிக்கல் இருப்பதாய்த் தோன்ற
தொடர்ந்து சுவைக்கவும்
மனமின்றிப் போக
கையிலிருந்த ஐஸைத்
தூர எறிந்தேன்!
கொஞ்சம், கொஞ்சமாய்
கரையத் தொடங்கியது
குச்சி ஐஸ்!
கூடவே...
எனது இயலாமையும்
சிறுவனின் ஏக்கமும்!
2 கருத்துகள்:
அருமை.சொல்லவேண்டியதை
படிப்பவர் உணர வேண்டியதை
எளிமையான சொற்களைக் கொண்டே
மிக வலிமையாக சொல்லிச் செல்லும் நேர்த்தி
பாராட்டுக்குரியது.தொடர வாழ்த்துக்கள்
ரமணி அவர்களின் கருத்து என்னைப் பொருத்தமட்டில் மிகவும் மதிப்பிற்குரியது. நன்றிகள் பல.
கருத்துரையிடுக