பைக்குள் திணிக்கப்பட்ட
பழைய துணிகளாய்
பேருந்திற்குள்
பிதுங்கிப் பயணிக்கிறது
மக்கள் கூட்டம்!
செருப்பணிந்த கால்களின் மிதி
மூச்சைத் திணறடிக்கும் நெரிசல்
அருவெருக்கத்தக்க உரசல்கள்
அநாகரீகத் தள்ளு முள்ளு
நடத்துனரின் வசவு...
இவற்றின்
எந்தப் பாதிப்பையும்
பிரதிபலிக்கவில்லை
பேருந்தை விட்டு
இறங்கிச் செல்வோரின்
முகங்கள்!
பழைய துணிகளாய்
பேருந்திற்குள்
பிதுங்கிப் பயணிக்கிறது
மக்கள் கூட்டம்!
செருப்பணிந்த கால்களின் மிதி
மூச்சைத் திணறடிக்கும் நெரிசல்
அருவெருக்கத்தக்க உரசல்கள்
அநாகரீகத் தள்ளு முள்ளு
நடத்துனரின் வசவு...
இவற்றின்
எந்தப் பாதிப்பையும்
பிரதிபலிக்கவில்லை
பேருந்தை விட்டு
இறங்கிச் செல்வோரின்
முகங்கள்!
2 கருத்துகள்:
பேருந்து பயணிகள் போலத்தான்,
மனிதனும்,தன் வாழ்க்கையில் கண்ட , இன்பம் துன்பம்,இடர் துயர் ,கஷ்டம் நஷ்டம் சந்தோஷம் துக்கம் ,எதையும் முகத்தில் காட்டாமல் தன் இறுதிப்பயணத்தைத் துவங்குகிறான்.
கருத்துரையிடுக