இலக்கை அறியாத அம்பு
நிலை கொள்ளாமல்
அங்கும் இங்கும்
அலை பாய்ந்தது மனம்.
விநாடிக்கொருமுறை
எதையோ தேடி, எதற்கோ ஆசைப்பட்டு...
இறுதி வரை எதுவும் கிட்டாமல்
ஓடிக் களைத்துத் திரும்பிய
மனதை விட்டு
அதிக தூரத்திற்கு
அன்னியப் பட்டுப் போயிருந்தது
அமைதி.
இடை விடாமல் தேடி அலைந்ததில்
திரும்பக் கிடைக்காமலேயே போயின
'நேரமும்' 'நிம்மதியும்'!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக